Saturday, 10 September 2011

காற்று..!

மெல்ல நகரும்
நதிக்கு ஜதி சொல்லி
தலையசைக்கிறது
கரையோர மரம்....

காற்றோடு பேச
குழந்தையாய்
முயற்சி செய்கிறது
கரையோர பசும் புல்!

வெட்கி தலைகுனியும்
அந்த மலரோடு
என்னதான் பேசியிருக்கும்?
கடந்து சென்ற காற்று..

கலைந்து அலையும்
காற்றுக்கோ....
மலரென்ன? மரமென்ன?
நதியென்ன? புல்லென்ன..?
எல்லாம் ஒன்றுதான்!